ஆடிகம பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

122 26

ஆணைமடு- பூனவிட்டிய  , ஆடிகம பகுதியில்  மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணெடுவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த  சடலம் தொடர்பாக நேற்று அதிகாலை 3 மணியளவில்  ஆணைமடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

66 வயதுடைய பூனவிட்டிய – ஆடிகம  பகுதியயை சேர்ந்த  மோதா மேரிகந்ஹே ஞானவதி எனப்படும் பெண்ணெருவரின் சடலமே  இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது. 

மேற்படி பெண்ணின் சடலம்  கழுத்து கம்பியால் இறுக்கப்பட்டு ,   கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் காணப்பட்ட பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன்,  ஆணைமடு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய  பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை  நேற்றைய தினம்  பொலிஸார் மேற்கொண்டனர். 

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நிலவுவதால்  சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் வெவ்வேறு கொணங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.  

There are 26 comments

Leave a comment

Your email address will not be published.