முல்லைத்தீவில் சீமந்துக்கற்கள் விற்கும் 59 ஆவது படைப்பிரிவு

9 0

வடதமிழீழம் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த ராணுவத்தினர் வீடு கட்டுவதற்குப் பயன்படும் சீமெந்து கற்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.


குறித்த இராணுவ முகாமிற்கு வெளியே காணப்படும் விளம்பரப்பலகையில் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொலைபெசி வாயிலாக தொடர்புகொண்டு ஓடர்செய்து கற்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வன்னி பெருநிலப்பரப்பில் மக்கள் செய்துவரும் பல்வேறு தொழில்களையும் இராணுவத்தினர் செய்துவருகின்றனர்.

விவசாயம் பால் பதனிடும் நிலையம் மீன்பிடி சிறு ணவகம் பெரியளவிலான ஹோட்டல் ஆகிய தொழிற்துறைகளை இராணுவம் ஏற்கனவே நடத்தி வருகின்றது.
இந்நிலையில் மக்களின் குடிசைக் கைத்தொழிலாக இருந்து வரும் கற்கள் செய்து விற்பனை செய்யும் தொழிலையும் இராணுவம் கையிலெடுத்திருக்கின்றமையானது மக்களின் எஞ்சியிருக்கின்ற தொழில் முயற்சிகளையும் அபகரிக்கும் நோக்கம் கொண்டது எனவும் இது தொழில்சார்ந்த என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக உரும்பிராய் பங்கு திருச்சபை மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017 0
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக உரும்பிராய் பங்கு…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016 0
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி…

வவுனியா காட்டுப்பகுதியில் குண்டுகள் மீட்பு

Posted by - October 9, 2016 0
வவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து இன்று காலை இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை அலகல்ல அலுக்கம காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் தீ…

யாழ்.உடுப்பிட்டி பகுதியி தோட்டக் கிணற்றில் இருந்து பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 4, 2016 0
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வல்வை வீதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையாக வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில்…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - August 23, 2017 0
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரிடம் விளக்கம்…

Leave a comment

Your email address will not be published.