பிரபுக்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத கார்கள் கங்காராம விகாரையில் காட்சிக்கு

279 0

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பிரபுக்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் கண்காட்சிக்காக வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத 8 வாகனங்கள் இதற்கு முன்னர் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

இந்த அதிசொகுசு வாகனங்கள் திருத்தங்களுக்கு உட்படுத்தி பயன்படுத்த முடியாமையினாலும், விற்பனை செய்ய முடியாமையினாலுமே கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment