ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ: அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.
லண்டனில் இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை சுவரில் அத்துமீறி ஏற முயன்ற இளைஞரை போலீசார் 3 நிமிடங்களில் கைது செய்தனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தியுள்ளனா்.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பகல் கொள்ளை யாருடைய தலையில் விழுந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளதாகவும், தமக்கு தூய்மையான ஒரு தலைவரும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டமும் இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரல பிரதேச சபைக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே
தேங்காயின் கட்டுப்பாட்டு விலையான 75 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகள் சுற்றிவளைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு, மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 110 ரூபாவிற்கு தேங்காய் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு பதில் நீதவான் இல்லியாஸ் முபாரீஸினால் ரூபா 1,500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார். 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 28ஆம் திகதியும் ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 4ஆம் திகதியும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டிருந்தன. இந்த நிலையில், மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக கால எல்லையை டிசம்பர் 22ஆம்
அநுராதபுரம் திறப்பனை தெமடேகம பிரதேசத்தில் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்றினது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த உடல் மீட்கப்பட்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்டு யானை ஒன்றின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்திருந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பீஜிங் அருகே உள்ள கிராமத்தில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த ஐந்து பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் இருந்த சில ஊழல்வாதிகள் தொடர்பில் இன்னும் நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிப்பதாக, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஏழ்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, எதிர்வரும் 22ம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது