போதைப்பொருள் பாவனையை தடுக்க பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டம்

Posted by - December 13, 2017

எதிர்கால சந்ததியை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகத்தில் மாத்திரமன்றி வெளித்தரப்புகளினதும் தலையீடு மிகவும் அவசியம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து உளவுப் பிரிவு தகவல்களையும், பாடசாலை சமூகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறினார். பாடசாலை மட்டத்தில் நிறுவப்படும் குழுக்கள் ஊடாகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

சொக்கலட்டுடன் தங்கம் கடத்தியவர் கைது

Posted by - December 13, 2017

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.07 கிலோகிராம் நிறையுடையது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொக்கலட்டுகள் கொண்டு வரப்பட்ட பையில் மிகவும் சூட்சுமமாக மறைத்து குறித்த தங்க நகைகள் கொண்டு வரப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘1990 சுவசெரிய’ அம்பூலன்ஸ் சேவையை வியாபிப்பதற்கு இந்திய அரசு இணக்கம்

Posted by - December 13, 2017

‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல் இந்திய நன்கொடையின் கீழ் தென் மற்றும் மேல் மாகாணங்களில் ‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அச் சேவையினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்காக ‘1990 சுவசெரிய மன்றம்’ இனை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான சட்ட வரைபு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் இரண்டாம் கட்டமாக இச்சேவையினை

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமை – அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - December 13, 2017

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. குறித்த கற்கைநெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக் குறைந்தது Credit Passes (C) சித்திகள் இரண்டினையும் Simple Passes (S) ஒன்றினை ஒரே தடவையில்

பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியம்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 13, 2017

பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியும் என்று, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும்போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 34 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டங்களை

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு!

Posted by - December 13, 2017

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(13) கல்வியமைச்சில் இடம் பெற்றது.

ஆஸி.யில் இந்தியப் பெண்ணை சித்திரவதை செய்த இலங்கைத் தம்பதிகள்

Posted by - December 13, 2017

அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளார். 

விடுதலைப்புலிகளுக்காக தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில்!

Posted by - December 13, 2017

தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி

Posted by - December 13, 2017

வவுனியாவிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தை உடைத்து சிலர் கொள்ளையிட முற்பட்டதாக, பொலிஸில் முறையிடப்பட்டது. கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, அவர்கள் தானியக்க இயந்திரத்தை உடைக்க முற்பட்ட வேளை, சத்தம் கேட்டு அங்கிருந்த காவலாளி அப் பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, சந்தேகநபர்கள் அவ் இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கெமராக்களை பரிசோதித்த பொலிஸார், அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்

Posted by - December 13, 2017

முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலுள்ள ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9ம் திகதி மாலை ரியூசன் வகுப்பு முடிந்து, இரவு 07.00 மணியளவில் வீடு திரும்ப முற்பட்ட குறித்த மாணவியை, வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி, சந்தேகநபர் தனது காரில் ஏற்றியுள்ளார். எனினும், பாழடைந்த பகுதியொன்றில் வைத்து அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய