‘1990 சுவசெரிய’ அம்பூலன்ஸ் சேவையை வியாபிப்பதற்கு இந்திய அரசு இணக்கம்

274 0

‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல்

இந்திய நன்கொடையின் கீழ் தென் மற்றும் மேல் மாகாணங்களில் ‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அச் சேவையினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்காக ‘1990 சுவசெரிய மன்றம்’ இனை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான சட்ட வரைபு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் இரண்டாம் கட்டமாக இச்சேவையினை வியாபிப்பதற்காக மேலும் 209 அம்பூலன்ஸ் வண்டிகளை பயன்படுத்தி, ஏனைய 07 மாகாணங்களிலும் வியாபிப்பதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி அளிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த மன்றத்தினை ஸ்தாபிக்கும் வரை இவ்வம்பூலன்ஸ் சேவையினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக, GVK EMRI லங்கா (தனியார்) கம்பனி (GEL) மற்றும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கால எல்லையினை நீடிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment