சீன நாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனப் பிரஜை
சட்டவிரோதமான முறையில் சீனாவில் இருந்து ஒருதொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த சீனப் பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க பிரிவின் போதை தடுப்பு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல். – 881 என்ற விமானத்தில் சந்தேகநபர் வருகை தந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 155 சிகரட் பெட்டிகளில் 31,000 சிகரட்டுக்கள் இருந்துள்ளதுடன்,

