முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை: மரண தண்டனைக் கைதியின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!!

211 0

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த மனுவை, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான தேவிகா தென்னகோன் மற்றும் எஸ்.துறைராஜா ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பில் வைத்து முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய சந்தேகநபரான ஜோன்ஸ்டன் கொலின் வலன்ஸ்டினோ கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேலும், தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து, தம்மை விடுதலை செய்யுமாறும் கோரி குறித்த நபரால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மனு விசாரணைக்கு வந்த போதே, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a comment