தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 22 ஆயிரம் பேர் பாதிப்பு – மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்கு காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்கு காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
மட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முன்தினம்(16) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மக்களை நேசிக்கும் பண்பும், திறமையும், ஊழலற்ற தன்மையும், நேர்மையும் கொண்டவர்களை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியற் கைதிகள் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமது கோரிக்கைகளை வென்று தருவதாக வாக்குறுதியளித்த எவரும் அதைச் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த எட்டாண்டுகளில் இவ்வாறு சில தடவைகள் நடந்திருப்பதாகவும் அவர்கள்
களனி – திப்பிடிகொட பகுதியிலுள்ள பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது. பொலிஸாருக்கும் தீயணைப்பு பிரிவினருக்கும் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் பொது மக்களின் உதவியோடு தொழிற்சாலையில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இதுவரை எதுவித உயிர் ஆபத்துக்களும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்குச் சொந்தமான வேன் ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்றவரான 46 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லிந்துலை – மில்டன் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஒருதொகை மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட தலவாக்கலை விஷேட அதிரடிப்படையினர், இதன்போது ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபரை லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சேவல் சின்னத்தில் பல இடங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதுதொடர்பான வேட்பு மனு கையொப்பமிடும் நிகழ்வு கொட்டகலவிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்றுள்ளது.
பிக்கு ஒருவர் உட்பட தேரருடன் சென்ற இருவர் மீது அரநாயக்கவில் தாக்குதல் நடாத்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரநாயக்க சாமகம புனா பொகுன விகாராதிபதி ஒருவரும் அவருடைய சேவகர்கள் இருவருமே இவ்வாறு தாக்குதலுக்குற்பட்டுள்ளனர். காயமடைந்த தேரர் அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரும் கேகாலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்ததாகவும், அவர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் தேயிலை உட்பட பெருந்தோட்டப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கையில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவானது மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நேரடியாக பாதிப்புச் செலுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.