களனியில் திடீர் தீ விபத்து.

275 0

களனி – திப்பிடிகொட பகுதியிலுள்ள பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது.

பொலிஸாருக்கும் தீயணைப்பு பிரிவினருக்கும் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் பொது மக்களின் உதவியோடு தொழிற்சாலையில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இதுவரை எதுவித உயிர் ஆபத்துக்களும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment