ஊழலற்ற, நேர்மையானவர்களுக்கு வாக்களியுங்கள் – யாழ் ஊடக அமையத்தில் முதலமைச்சர் தெரிவிப்பு

26026 93
 

மக்களை நேசிக்கும் பண்பும், திறமையும், ஊழலற்ற தன்மையும், நேர்மையும் கொண்டவர்களை உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் பிரதேசத்தை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரை தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்க வேண்டிய தகமைகள் நேர்மை, திறமை மற்றும் ஊழலை வெறுக்கும் பாங்கு போன்றவைகளே மக்களை நேசிக்க வைக்கின்றது.
எந்த கட்சி என்பது முக்கியமானதல்ல. ஊழலற்ற உயர்ந்த குணங்கள் உடைய வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தின் 5ம் ஆண்டை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வருகைதந்தார். அதன்போது ஊடக அமையத்துக்கு வாழ்த்தினைத் தெரிவித்து வாழ்த்து அறிக்கையை அவர் வாசித்தார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார், முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும் வருமாறு,

Leave a comment