பாலித ரங்ககே பண்டாரவை அலரிமாளிகையில் ஒரு மூலையில் கட்டிப்போடுங்கள்-சாகர தேரர்

Posted by - December 30, 2017

பாலித ரங்கே பண்டாரவுக்கும் மலிக் சமரவிக்ரமவுக்கும் அரச வனங்களிலுள்ள மரங்கள் டொலர்களாகவே தென்படுவதாகவும், இதுவே இந்த அரசாங்கத்தின் பச்சை வீட்டுச் சிந்தனை எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார். வில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார மீது ஆனந்த சாகர தேரர் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர்

எனக்கு வட கொழும்பிலேயே அச்சுறுத்தல்- அமைச்சர் மனோ கணேசன்

Posted by - December 30, 2017

வட கொழும்பில் மையம் கொண்டுள்ள ஒருசில அரசியல் நபர்களிடமிருந்தே எனக்குஉயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார். மலைநாட்டிலும் எனக்கு அச்சறுத்தல் இல்லை. கொழும்பு மாவட்டத்திலும் மக்கள் மத்தியில் இருந்தும் எனக்கு அச்சறுத்தல் இல்லை. வடகொழும்பில் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாகவே எனக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி முறி மோசடி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

Posted by - December 30, 2017

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழுவின் ஆயுள் காலமும் நாளையுடன்(31) நிறைவடையவுள்ளதால் அறிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது இன்று அல்லது நாளைய தினம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஏற்கனவே ஆணைக்குழுவின் செயலாளர்  சுமதிபால உடுகம்சூரிய தெரிவித்திருந்தார். கடந்த 2015-2016 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இவ்வருட ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற

யாழ்.-கொழும்பு அரைச் சொகுசு பஸ்கள் இரண்டின் மீது கல் வீச்சு தாக்குதல்

Posted by - December 30, 2017

யாழ்ப்பாணம் – கொழும்பு  நோக்கி பயணிக்கும் இரு அரைச் சொகுசு பஸ்கள் மீது இன்று (30) அதிகாலை அனுராதபுர பங்டுலகம பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவொன்று கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தியுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பஸ்கள் இரண்டினதும் முன் கண்ணாடிகள் பாரிய சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த தாக்குதலினால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லையென பொலிஸார் அறிவித்துள்ளனர். அசம்பாவிதங்களை விளைவிக்க எதிர்பார்த்துள்ள குழுவொன்றினால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தற்கொலை

Posted by - December 30, 2017

கொழும்பு,  மருதானை ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பாதுகாப்பு அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோக துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் 54 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எனவும் குறித்த தற்கொலை தொடர்பில் மருதானைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

சய்டம் மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்க மருத்துவ சபை இணக்கம்

Posted by - December 30, 2017

சய்டம் தனியார் மருத்துவ நிறுவன மாணவர்களுக்கு 05 வாரகால மருத்துவ பயிற்சியுடன் மருத்துவப் பட்டம் வழங்குவதற்கு இலங்கை மருத்துவ சபை இணங்கியுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிலியல்ல தெரிவித்தார்.

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை இறுதிக் கட்டத்தில்

Posted by - December 30, 2017

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழு கூறியுள்ளது. 

இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்க கட்டணம்

Posted by - December 30, 2017

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 

காசல்ரீ நீர்தேக்கத்தில் பெண் சடலமாக கண்டெடுப்பு

Posted by - December 30, 2017

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலமொன்றை நோட்டன் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 

கடலில் மூழ்கி இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் உயிரிழப்பு

Posted by - December 30, 2017

ஹபராதுவை கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஹபராதுவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பெண் ஒருவர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளார்.