யாழ்ப்பாணம் – கொழும்பு நோக்கி பயணிக்கும் இரு அரைச் சொகுசு பஸ்கள் மீது இன்று (30) அதிகாலை அனுராதபுர பங்டுலகம பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவொன்று கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தியுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பஸ்கள் இரண்டினதும் முன் கண்ணாடிகள் பாரிய சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலினால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லையென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அசம்பாவிதங்களை விளைவிக்க எதிர்பார்த்துள்ள குழுவொன்றினால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதல் மேற்கொண்டவர்களைத் தேடி பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

