கொழும்பு, மருதானை ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பாதுகாப்பு அதிகாரி தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோக துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்டவர் 54 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எனவும் குறித்த தற்கொலை தொடர்பில் மருதானைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

