யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாகவும் அதனால் நாளைய (வியாழக்கிழமை) தினம் அதிகளவானோர் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வருவார்கள் எனவும் தாம் எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

