ஆர்.கே.நகர் தேர்தல்: அ.திமு.க. வேட்பாளர் மதுசூதனன் ஓட்டு போட்டார்

232 0

பழைய வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் மனைவி ஜீவாவுடன் வந்து ஓட்டு போட்டார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பழைய வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் மனைவி ஜீவாவுடன் வந்து ஓட்டு போட்டார்.

பின்னர் மதுசூதனன் கூறுகையில், ‘‘ஆர்.கே.நகரில் அம்மாவின் ஆசியுடன் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது’’ என்றார்.

அவரிடம், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் ஆதரவாளர்கள் பண வினியோகம் செய்வதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, ‘‘அவர் ஒரு மோசடி பேர்வழி, மக்களை ஏமாற்ற முடியாது’’ என்று தெரிவித்தார்.

Leave a comment