நாளை முதல் தீவி­ர­ம­டையும் தேர்தல் பிர­சார போர்.!

232 0

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கல்கள் அனைத்தும் இன்று நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வுக்கு வரு­கின்­றன. அதன்­படி  நாளை­ முதல் அர­சியல் கட்­சிகள்  மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்­களின்  வேட்­பா­ளர்கள் கடும்  பிர­சா­ரப்­ப­ணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

அது­மட்­டு­மன்றி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­ம­யைி­லான  பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சிகள்  நாட­ளா­விய ரீதியில்  கடும் பிர­சா­ரப்­ப­ணி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளன.

அந்­த­வ­கையில்  நாளை முதல் தேர்தல் களம் சூடு­பி­டிக்­க­வுள்­ளது.  இம்­முறை   புதிய தேர்தல் முறை என்­பதால்  அது­தொ­டர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்தும் பணி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.  குறிப்­பாக  இந்தத் தேர்தல் முறை ஊடாக 60 வீதம் தொகு­தி­மு­றை­மை­யிலும், 40 வீதம்  விகி­தா­சார முறை­மை­யிலும்   பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

அதன்­படி  ஒவ்­வொரு கட்­சி­யி­லி­ருந்தும்  தொகு­தி­க­ளுக்கு  வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் குறித்த வேட்­பாளர் அந்த தொகு­தியில் மட்­டுமே பிர­சாரப் பணியில் ஈடு­ப­டுவார். ஆனால் விகி­தா­சார முறை­மையில் போட்­டி­யி­டு­ப­வர்கள்  குறித்த உள்­ளூ­ராட்­சி­மன்றப் பிர­தேசம்  முழு­வ­திலும்  பிர­சா­ரத்தில்  ஈடு­ப­டு­வார்கள்.

கொழும்பு மாந­க­ர­ச­பையைப் பொறுத்­த­வ­ரையில்  தொகுதி அடிப்படையில் 66 உறுப்பினர்களும்  விகிதாசார முறைமையில் 44 உறுப்பினருமாக 110 உறுப்பினர்கள்  இம்முறை  புதிய தேர்தல் முறைமையின் ஊடாக    தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment