ஜெயலலிதா வீடியோ விவகாரம்: தினகரன் மீது நடவடிக்கை பாயுமா?

234 0

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட கூடும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் நேற்று வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவை சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ தெரியாமல் தான் வெளியிடுவதாக வெற்றிவேல் பேட்டியின்போது கூறினார்.

ஆனால் ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல டி.டி.வி. தினகரன் அணியிலேயே இது மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளது.

தினகரனுக்கு தெரியாமல் வெற்றிவேல் எப்படி வீடியோ காட்சிகளை வெளியிட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக வெற்றிவேலிடம் போலீசார் விசாரணை நடத்தும்போது புதிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களில் வெற்றிவேல் தான் மிக முக்கியமானவர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்கு ஏஜெண்டாக இருப்பது அவர்தான்.

இந்த காரணத்தால் வெற்றிவேலிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு டி.டி.வி.தினகரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக காவல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வெற்றிவேலை தூண்டி விட்டு பின்னணியில் இருந்ததாக டி.டி.வி.தினகரன் மீது விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட கூடும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a comment