பிலிப்பைன்ஸ்: கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் 251 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 251 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி வரும் ஜனவரி முதல் தகவல்கள் பறிமாறப்பட உள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கவும், அது பற்றிய தகல்களை சேகரிக்கவும் அந்த நாட்டுடன்
நாளை ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் டெல்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலைநிறுத்த வேண்டும் என ராமதாஸ் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்வு கி.துரைராஜசிங்கம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கி.துரைராஜசிங்கம், எங்களுக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒரு குடும்பம் நாங்கள் ஒன்றாகவே இருப்போம். குடும்பத்தில் யாரும்
அல்லைப்பிட்டியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் தனித்திருந்தவரைக் கட்டிவைத்துவிட்டு 20 பவுண் நகை மற்றும் 2 லட்சம் ரூபா காசு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் உள்ள குறித்த வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர் வீட்டுக்குச் சென்ற சமயம் கணவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அதிகாலை சுமார் ஒரு மணியளவில் ஆறுபேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதன் பின்னர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவை சேர்ந்த 27 வயதுடைய நபருக்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர், தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ளப்பட்ட விசேட வைத்திய குழுவிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வாழ்த்து தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து இதுவரை ஒன்பது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 9ம் திகதி முதல் இன்று காலை 6.00 மணிவரையான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று பாணம பகுதியில் தேர்தல்கள் சட்டத்தை மீறும் வகையில் தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது, 600 தென்னங்கன்றுகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் இது குறித்து பொத்துவில்
ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் கல்கிசை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்களான பெண்கள் 29, 30 மற்றும் 48 வயதானவர்கள் எனவும் பாதுக்கை, பேருவளை மற்றும் நாரம்வல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில் ஆள்மாராட்டம் செய்ய வந்ததாக கூறப்படும் மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் அடையாள அட்டையை மறந்து விட்டதாக கூறி பரீட்சை எழுத அமர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. பிலியந்தலை பகுதி பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.