2ஜி வழக்கு: மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

382 0

ஸ்பெக்ட்ரம் ஊழலில் டெல்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலைநிறுத்த வேண்டும் என ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகையே அதிரவைத்த 2ஜி ஊழல் வழக்கில் இருந்து தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
2ஜி ஊழல் குறித்த சில ஆவணங்கள் விசாரணை அமைப்புக்கு கிடைக்காமல் தடுக்கப்பட்டதாலும், குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. அமைப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலும் தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. ஆனால், எல்லா நாளும் வெல்ல முடியாது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் டெல்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலைநிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment