ஈரான் நாட்டில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு

Posted by - December 31, 2017

ஈரான் நாட்டில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இருப்பதாக டெக்ரான் நகர தலைமை போலீஸ் அதிகாரி ஹோசீன் ரகிமி தெரிவித்து உள்ளார்.

மக்கள்தான் இறுதி எஜமானர்கள்: ரஜினியின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - December 31, 2017

ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்றார்.

புதிய பேரவை தொடங்குகிறார் தினகரன்

Posted by - December 31, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற டி.டி.வி. தினகரன் புதிய பேரவையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து

Posted by - December 31, 2017

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் மற்றும் தனிக்கட்சி அறிவிப்பு தொடர்பாக பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் தெரிகிறது: நாஞ்சில் சம்பத்

Posted by - December 31, 2017

நடிகர் ரஜினியின் இன்றைய அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் இருப்பதை பார்க்கிறேன் என டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறினார்.

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு

Posted by - December 31, 2017

அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சி விரைவில் உதயம்?

Posted by - December 30, 2017

வடமாகாண சபையின் முக்கிய அமைச்சராக இருந்து பதவியிலிருந்து இறக்கப்பட்ட பா. டெனீஸ்வரன் தான் சார்ந்திரந்த ரெலோ கட்சியினராலும் புறக்கணிப்பட்டிருந்த நிலையில் தனி வழி செல்லத் தயாராகியுள்ளார். மிக வரைவில் அவர் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான பா.டெனீஸ்வரன் தலைமையில புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் போராளிகள்,  மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கியதாக அந்த கட்சி அமைக்கப்படவுள்ளது. கட்சி அமைக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்களின் கருத்துகளின்

யாழில் தொடரும் மர்ம மரணங்கள்…… இதுவரையில் 21 பேர் பலி!!

Posted by - December 30, 2017

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான முருகானந்தன் ஜெயனி என்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ஜெயனி ஆரம்பத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை ஆபத்தாக இருந்தமையினால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு

மீண்டும் தீவிர அரசியலில் கெஹேலிய ரம்புக்வெல? மஹிந்த அணியிலிருந்து விரைவில் பல்டி?

Posted by - December 30, 2017

மஹிந்த அணியான கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசில் இணைவது உறுதியாகிவிட்டதாக அரச தரப்பின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக தாமரை மொட்டு சின்னத்திலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தைப் பெறவேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகரொருவர் விடுத்த கோரிக்கையை கெஹலிய ரம்புக்வெல்ல நிராகரித்துவிட்டார் என அறியமுடிகின்றது.அரசுடன் இணையும் பட்சத்தில் ஊடக இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு கெஹலியவுக்கு வழங்கப்படுமென அரச உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அரசுடன் எதிர்க்கட்சி இணைந்தாலும் மக்கள் இணையமாட்டார்கள்!-மகிந்த

Posted by - December 30, 2017

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் இணைந்து கொண்ட போதிலும் மக்கள் ஒருபோதும் இணைந்து கொள்ள மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். குணசிங்குபுர புர்வாராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தலைவர்கள் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.