தொல் பொருட்களை சேதப்படுத்தினால் 20 இலட்சம் வரை அபராதம் விதிக்க யோசனை

Posted by - December 24, 2017

தொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார். தற்போது, இந்தக் குற்றங்களுக்காக 50,000 ரூபா அபராதமே விதிக்கப்படுவதாக தொல்பொருள் மேலதிக பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பீ.பி.மண்டாவல சுட்டிக்காட்டியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், தொல் பொருட்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக 20 இலட்சம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க, தமது திணைக்களத்திற்கு அமைச்சர் யோசனை வழங்கியுள்ளதாக, மண்டாவல

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும்!-மாவை

Posted by - December 24, 2017

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் உரிமைக்காக போராடிக் கொண்டும் இருக்கின்ற வேளையில் நாட்டில் சம உரிமையோடு வாழ்வதற்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தொடர்ந்தும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டிற்கான மீளத் தேசிய விழா  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு

புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில்

Posted by - December 24, 2017

மக்களின் உடமைகளுக்கும் அரச சொத்துக்களுக்கும் இழப்பினை ஏற்படுத்திய ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் கடுவெல நகர வாராந்த சந்தைக் கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

எமது ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிப்போம்.!- பஷில்

Posted by - December 24, 2017

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்கவும் தயங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன

நான் ஒரு போதும் ஐ.தே.கட்சிக்கு செல்லமாட்டேன்- கெஹெலிய

Posted by - December 24, 2017

தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக சிலர் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் என தங்க வரிகளினால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். இந்த அரசாங்கம் அந்த தங்க வரிகளை அழிக்க முயற்சிக்கின்றது. இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை தங்களுடைய வாக்குகளைக் குறைப்பதற்கே

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கான காரணம் என்ன ?- மஹிந்த

Posted by - December 24, 2017

கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்திட்டங்களை இந்த அரசாங்கம் கைவிட்டமையே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கும் தான் ஒரு போதும் காரணமாக மாட்டேன். இதற்காக தன்னைக் குற்றம்பிடிக்க வேண்டாம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார். கொச்சிகடை பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அபேட்சகரின் வீட்டிலிருந்து கமநல திணைக்கள உரம் 62 பேக் மீட்பு

Posted by - December 24, 2017

கூட்டு எதிர்க் கட்சியின் பெயரில் இங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் பெண் அபேட்சகர் ஒருவர் வீட்டிலிருந்து குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்த 62 பேக் உரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அனுராதபுர மாவட்ட கெபதிகொல்லாவ பிரதேச சபையின் கீழ் உள்ள வாகல்கட தொகுதியில் ஸ்ரீ ல.பொ. பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளரின் வீட்டிலிருந்தே இந்த உரம் மீட்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளரின் கணவன் கமநல சேவைகள் திணைக்களத்தில் விவசாயத்துறை அதிகாரியாக சேவையாற்றி வருகின்றார். விவசாய சேவைகள் மத்திய நிலையத்தினால்

மஹிந்த சுதந்திரக் கட்சியிலிருந்து விலகும் அறிவிப்பு 2 ஆம் திகதி

Posted by - December 24, 2017

ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டு பொதுஜன பெரமுன கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் மலர் மொட்டு கட்சியிலும் எந்தவித பதவியையும் வகிக்க முன்வரவில்லை. ஸ்ரீ ல.சு.க.யின் போஷகராக இருந்து கொண்டு உத்தியோகப்பற்றற்ற முறையில் மறைமுக ஆதரவை வழங்கி வந்தார். இந்நிலையில் கட்சி ஆதரவாளர்களிடையே காணப்படும் சந்தேகத்தை தீர்க்கும் வகையிலும், கூட்டு எதிரணிக்கு உட்சாகத்தை கொடுக்கவும் எதிர்வரும் 2 ஆம் திகதி சுகததாச உள்ளக

லயன் குடியிருப்பில் தீ: ஒரு வீடு முற்றாகவும், இரு வீடுகள் பகுதியளவிலும் சேதம்

Posted by - December 24, 2017

நுவரெலியா – லபுக்கலை மேற்பிரிவு தோட்டம் – இலக்கம் 7 லயன் குடியிருப்பில் நேற்று (23) ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், ஒரு வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. அத்துடன், இரண்டு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ ஏனைய குடியிருப்புகளுக்கும் பரவியதானாலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. விடயமறிந்த பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் எவருக்கும் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை. எனினும், ஒரு குடியிருப்பு முற்றாக

பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்

Posted by - December 24, 2017

கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால், பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப் பொருளிலில், கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, பாடசாலை மாணவர்களிடையே போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் ஒரு பகுதியை கொண்டு குறித்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும்