நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கான காரணம் என்ன ?- மஹிந்த

343 0

கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்திட்டங்களை இந்த அரசாங்கம் கைவிட்டமையே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கும் தான் ஒரு போதும் காரணமாக மாட்டேன். இதற்காக தன்னைக் குற்றம்பிடிக்க வேண்டாம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.

கொச்சிகடை பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment