லயன் குடியிருப்பில் தீ: ஒரு வீடு முற்றாகவும், இரு வீடுகள் பகுதியளவிலும் சேதம்

480 0

நுவரெலியா – லபுக்கலை மேற்பிரிவு தோட்டம் – இலக்கம் 7 லயன் குடியிருப்பில் நேற்று (23) ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், ஒரு வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.

அத்துடன், இரண்டு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ ஏனைய குடியிருப்புகளுக்கும் பரவியதானாலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

விடயமறிந்த பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் எவருக்கும் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை.

எனினும், ஒரு குடியிருப்பு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் இரு குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தீ விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment