மஹிந்த சுதந்திரக் கட்சியிலிருந்து விலகும் அறிவிப்பு 2 ஆம் திகதி

351 0

ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டு பொதுஜன பெரமுன கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் மலர் மொட்டு கட்சியிலும் எந்தவித பதவியையும் வகிக்க முன்வரவில்லை. ஸ்ரீ ல.சு.க.யின் போஷகராக இருந்து கொண்டு உத்தியோகப்பற்றற்ற முறையில் மறைமுக ஆதரவை வழங்கி வந்தார்.

இந்நிலையில் கட்சி ஆதரவாளர்களிடையே காணப்படும் சந்தேகத்தை தீர்க்கும் வகையிலும், கூட்டு எதிரணிக்கு உட்சாகத்தை கொடுக்கவும் எதிர்வரும் 2 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பகிரங்க பிரச்சார நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் வைத்து தான் இக்கட்சியில் தலைமைத்துவம் பெறப் போவதை உத்தியோகபுர்வமான அறிவிக்கவுள்ளதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment