நான் ஒரு போதும் ஐ.தே.கட்சிக்கு செல்லமாட்டேன்- கெஹெலிய

350 0

தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக சிலர் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் என தங்க வரிகளினால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். இந்த அரசாங்கம் அந்த தங்க வரிகளை அழிக்க முயற்சிக்கின்றது.

இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை தங்களுடைய வாக்குகளைக் குறைப்பதற்கே முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும், தான் ஒரு போதும் ஐ.தே.கட்சிக்கு மீண்டும் செல்ல மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment