அபேட்சகரின் வீட்டிலிருந்து கமநல திணைக்கள உரம் 62 பேக் மீட்பு

312 0

கூட்டு எதிர்க் கட்சியின் பெயரில் இங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் பெண் அபேட்சகர் ஒருவர் வீட்டிலிருந்து குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்த 62 பேக் உரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அனுராதபுர மாவட்ட கெபதிகொல்லாவ பிரதேச சபையின் கீழ் உள்ள வாகல்கட தொகுதியில் ஸ்ரீ ல.பொ. பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளரின் வீட்டிலிருந்தே இந்த உரம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வேட்பாளரின் கணவன் கமநல சேவைகள் திணைக்களத்தில் விவசாயத்துறை அதிகாரியாக சேவையாற்றி வருகின்றார். விவசாய சேவைகள் மத்திய நிலையத்தினால் பகிரப்பட வைக்கப்பட்டிருந்த உரப் பைகளே தமது வீட்டில் வைத்து பகிர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Leave a comment