கல்வியல் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி நவம்பர் 2இல் வெளியாகும்

Posted by - October 31, 2017

2017ஆம் ஆண்டுக்கான, கல்வியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் ( நவம்பர் 02) ஆம் திகதி வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2015 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 27 பாடங்களுக்கான 4745 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் நவம்வர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும் எனக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தோனேசியாவின் “பிம் சுகி” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

Posted by - October 31, 2017

இந்தோனேசியாவின் கடற்படைக்கு சொந்தமான “பிம் சுகி” எனும் பாய்மரக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு நற்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் மற்றும் அக்கப்பலின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடற்படை தலைமையகத்தில் புதிதாக கடற்படை தளபதியாக பதவியேற்ற வைஸ் அட்மிரால் ஸ்ரீமேவன் ரணசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டனர். மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய கடற்படடை வீரர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படும் நற்புரீதியான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்கு!

Posted by - October 31, 2017

சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச கோரிக்கை மற்றும் கல்முனை மக்களின் மாநகர சபையை 4 உள்ளுராட்சி சபைகளாக பிரிக்கும் கோரிக்கை என்பன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணை அமைப்பாளர் கலாநிதி வசீர் ஹ{ஸைன், இந்த விடயத்தில் தான் நடுநிலையாக இருந்து  இருதரப்புக்கும் நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு

Posted by - October 31, 2017

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது. சமூக சமூக சேவைகள் திணைக்களத்தின் வட மாகாண பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் மன்னாரில் இடம் பெற்றது. -இதன் போது விருந்தினர்களாக வடமாகாண மகளிர் விவகாரம்,சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல், மன்னார் நகர பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்

​பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா

Posted by - October 31, 2017

தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர்

Posted by - October 31, 2017

அரசியல் அமைப்பு சீர்த்திருத்த குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை அரசியல் அமைப்பு பேரவை கூடியது. அரசியல் அமைப்பு வழிநடத்திற்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஜனம்பதி விக்ரமரத்ன உரையாற்றும் போது, ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக அவருடைய உரைக்கு இடையூறு செய்து வந்தனர். இந்தநிலையில், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர் தினேஸ்குணவர்தன, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, சபாநாயகர் எச்சரிக்கை

சைட்டம் எதிர்ப்பு போராட்டம்

Posted by - October 31, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தை முடக்க தாக்கும் செலுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் அரசியற் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார். அவர்கள் எதிர்பார்த்த எதிர்பார்த்த பதில் கிடைத்தது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், தாம் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என லால் காந்த தெரிவித்துள்ளார். எனவே, தமது போராட்டத்தை தடுக்க முடியாது என லால் காந்த

கார்லஸ் பியுஜ்மன்ட் மக்களுடன் சந்திப்பை நடத்தவிருப்பதாக அறிவிப்பு

Posted by - October 31, 2017

கட்டலோனியாவின் சர்ச்சைக்குரிய தலைவர் கார்லஸ் பியுஜ்மன்ட், ப்ரசல்ஸில் மக்கள் சந்திப்பை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்பெயினில் இருந்து பிரிந்து கட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தற்போது அந்த பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ஸ்பெயின் கைக்கொண்டுள்ளது. அத்துடன் தனிநாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்ட பிராந்தியத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தநிலையில் இதுநாள் வரையில் பொதுவெளியில் தோன்றாதிருந்த கார்லஸ், விரைவில்

சீனாவில் 1000 கிலோமீற்றர் நீளமான சுரங்கம்

Posted by - October 31, 2017

1000 கிலோமீற்றர் நீளமான சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான நவீன தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் சீனாவின் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திபெத்தின் ப்ரம்மபுத்ரா ஆற்றில் இருந்து சீனாவிற்கு நீரைக் கொண்டுச் செல்லும் நோக்கில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தை கலிஃபோர்னியாவாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பதாக, கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தினால் ஹிமாலயா பிராந்தியத்தில் கடுமையா சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆசியாவின் பல நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகள்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழகம்

Posted by - October 31, 2017

அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மறியல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறர். இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவ ஒன்றிணை தலைவர் கருத்து தெரிவித்தார்.