வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு

437 0

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.

சமூக சமூக சேவைகள் திணைக்களத்தின் வட மாகாண பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் மன்னாரில் இடம் பெற்றது.

-இதன் போது விருந்தினர்களாக வடமாகாண மகளிர் விவகாரம்,சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல், மன்னார் நகர பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன் , மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சந்திரையா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

காலை 9.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் விழிர்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது.

-குறித்த ஊர்வலத்தில் முதியோர்கள், பாடசாலை மாணவர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

-பிரதான பாலத்தடியில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.

-மன்னார் நகர சபை மண்டபத்தில் முதியோர்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, சர்வதேச முதியோர் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, முதியோர்கள் மத்தியில் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசில்களும், வெற்றிக்கெடையங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment