முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - November 1, 2017

தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட கால விசாரணைகளையடுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இத்தீர்ப்பை வழங்கினார். சுனில் அப்ரூ 2003ஆம் ஆண்டு தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தரப்பில் வழக்குப் பதியப்பட்டதுடன், குற்றவாளியே இக்கொலையின் சூத்திரதாரி என்பதையும் ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தனர். இதையடுத்து, குற்றவாளி மீதான

உள்ளூராட்சி தேர்தல் ஜனவரியில்

Posted by - November 1, 2017

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - November 1, 2017

அதிகாரப்பகிர்வு என்பது எந்தவொரு காரணத்துக்காகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது மீளப்பெறக்கூடியதாகவோ இருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அது நீண்டகாலம் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் நாடுமுழுவதும் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் இன்று இடம்பெறும் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்படவேண்டும். நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினை அவ்வாறு உள்நாட்டில்

ரத்துபஸ்வல சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - November 1, 2017

சர்ச்சைக்குரிய கம்பஹா ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பிலான வழக்கு மீதான விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் நீதவான் டி.ஏ ருவண் பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுத்தமான குடிநீரை பெற்றுதருமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

குடிபோதையில் உந்துருளி செலுத்திய மதகுரு

Posted by - November 1, 2017

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பிரதேசத்தில்  மதகுரு ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குடிபோதையில் உந்துருளி செலுத்தியுள்ளதான் காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த மதகுரு வாகன அனுமதி பத்திரம் இன்றி உந்துருளியை செலுத்தி வந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.ரியாஸ் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபருக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதகுரு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவர்  மதகுரு என்பதால் அவருக்கு நீதிமன்றம் சிறப்பு மன்னிப்பு

புதிய கடற்படை தளபதி – இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

Posted by - November 1, 2017

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார். 22ஆவது கடற்படையின் புதிய தளபதி தனது கடமைகளை பொறுப்பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய கடற்படைத் தளபதிக்கு தமது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார். இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சாய்ந்தமருதில் முஸ்லிம் அமைச்சர்களின் கொடும்பாவிகள் எரிப்பு

Posted by - November 1, 2017

உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் என்பன இடம்பெற்றது. இந்நிலையில் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (01) பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியில் திரண்டிருந்த பொது மக்களினால் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத், ஹரீஸ் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் சாய்ந்தமருது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாரை நோக்கியும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக எமது

ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு.

Posted by - November 1, 2017

இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது. ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பைவழங்கும் என தூதுக்குழுவின் தலைவர் சர்வதேச கூட்டுறவு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் உதவி அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின்

வைத்தியசாலைகளுக்கு ஆசிரியர்கள்

Posted by - November 1, 2017

வைத்தியசாலைகளில் நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கை தாமதமடைவதை தடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வைத்தியசாலைகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மஹரகம அபேக்ஸா மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான சில மருத்துவமனைகளில் தற்போது இதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொழும்பு சீமாட்டி சிறுவர் போதனா மருத்துவமனைக்கு புதிதாக ஐந்து ஆசிரியர்களை சேவையில் ஈடுபடுத்த நேற்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏறாவூர் இரட்டைப் படுகொலை – தங்க ஆபரணங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

Posted by - November 1, 2017

ஏறாவூர் சவுக்கடி பகுதியில் தாய் மற்றும் மகனை கொலைச் செய்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் ஏறாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆபரணங்கள் மற்றும் கொள்ளையிடப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணம் ஆகியன இன்றைய தினம் புலனாய்வு பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குறித்த