வைத்தியசாலைகளில் நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கை தாமதமடைவதை தடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வைத்தியசாலைகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
மஹரகம அபேக்ஸா மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான சில மருத்துவமனைகளில் தற்போது இதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கொழும்பு சீமாட்டி சிறுவர் போதனா மருத்துவமனைக்கு புதிதாக ஐந்து ஆசிரியர்களை சேவையில் ஈடுபடுத்த நேற்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

