ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு.

371 0

இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது.

ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பைவழங்கும் என தூதுக்குழுவின் தலைவர் சர்வதேச கூட்டுறவு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் உதவி அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பை அவர் ஜனாதிபதிக்கு வழங்கினார்.

Leave a comment