உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் என்பன இடம்பெற்றது.
இந்நிலையில் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (01) பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் இறுதியில் திரண்டிருந்த பொது மக்களினால் அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத், ஹரீஸ் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் சாய்ந்தமருது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாரை நோக்கியும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

