ஏறாவூர் இரட்டைப் படுகொலை – தங்க ஆபரணங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

414 0

ஏறாவூர் சவுக்கடி பகுதியில் தாய் மற்றும் மகனை கொலைச் செய்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் ஏறாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆபரணங்கள் மற்றும் கொள்ளையிடப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணம் ஆகியன இன்றைய தினம் புலனாய்வு பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பெண்ணின் உறவினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் சாவகச்சேரியிலுள்ள குத்தகை நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி சவுக்கடி பகுதியிலுள்ள வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகனை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment