கொமியூனிகேஷன்களைக் குறிவைக்கும் புதுமையான திருடன்!

Posted by - November 2, 2017

நல்லிரவில் கொமியூனிகேஷன் நிலையமொன்றுக்குள் புகுந்த திருடன் பற்றிய விபரங்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஊஊவுஏ கெமராவில் பதிவாகியுள்ளது. முகங்களை மூடியவாறு நல்லிரவில் திருடவந்திருந்த இருவரில் ஒருவன் வெளியில் இருந்து வேவு பார்க்க, இன்னொருவன் குறிப்பிட்ட கொமியூனிகேஷன் நிலையத்திற்கு அருகில் இருக்கும் லைட் தூண் மூலம் மேலே ஏறி, கூரைவழியாகக் கடையினுள்ளே நுழைந்துள்ளான். அங்கு அவன் எதையோ திருடிக்கொண்டு வெளியேறுவது ஊஊவுஏ கெமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த கொமியூனிகேஷன் திருடனைப் பிடிக்க அதிகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேச சபை – ரிஷாட் தலையிட்டதால் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது-எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 2, 2017

சாய்ந்தமருது மக்களின் தனி பிரதேச சபைக் கோரிக்கையானது அரசியல் தலைமைத்துவங்களின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பிரச்சினை. இதன் பொறுப்பினை அரசியல் தலைமைத்துவங்களே ஏற்க வேண்டும். இந்த விடயத்தை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் – என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இதேவேளை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஹனீபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர், ஆர்ப்பாட்டங்கள் மூலமல்லாது

தமிழ்செல்வனின் 10ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Posted by - November 2, 2017

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனின் 10 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு தாமரைக்கேணி காரியாலயத்தில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கட்சி மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, தமிழ்செல்வனின் உருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2007ம் ஆண்டு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம்

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழிய சிறை

Posted by - November 2, 2017

முன்னாள் பிரதி அமைச்சர் ஷாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தண்டனையுடன் சேர்த்து 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் அம்பாறை பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் 50,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதி அமைச்சருக்கெதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் குறித்த வழங்கில் முன்னாள் பிரதி அமைச்சர்

மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 4 பேருக்கு பிணை

Posted by - November 2, 2017

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வர்த்தக நிலையத்தை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட நால்வர் பிணையில் செல்ல ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட நால்வரையும், தலா 50 ஆயிரம் ருபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் டிசம்பர் 04 ம் திகதி நீதின்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

Posted by - November 2, 2017

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன் புல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பாராட்டு தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போதே அவுஸ்திரேலிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்தார். இலங்கையின் போதைப்பொருளுக்கெதிரான ஆற்றல்களை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய பிரதமர்

மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் விசாரணைக்கு அழைப்பு

Posted by - November 2, 2017

மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் ஹட்டன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஹட்டன் உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போது கலகம் விளைவிக்கும் நோக்கில் செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் மற்றும் கட்சியின் உறுப்பினர்களான மலர்வாசகம், அருள்நாயகி, பாரதிதாசன் ஆகியோரே ஹட்டன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பிரஜாசக்தி பணியாளர்கள் ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 2, 2017

மலையகத்தில் பிரஜாசக்தி பணியாளர்கள் பலர் அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டும், பணி நீக்கம் செய்யப்பட்டும் காணப்படுவதால் இதற்கு கண்டனம் தெரிவித்து ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர். ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பிராஜாசக்தி பணியாளர்களாகிய பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து, எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2015ம் ஆண்டு இந்த நாட்டில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டதன் பின்பு

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் த.தே.கூ முன்மொழிவுகள்

Posted by - November 2, 2017

மாவட்ட பதில் அரசாங்க அதிபரின் பத்திரிகை அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி