மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் ஹட்டன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
ஹட்டன் உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போது கலகம் விளைவிக்கும் நோக்கில் செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் மற்றும் கட்சியின் உறுப்பினர்களான மலர்வாசகம், அருள்நாயகி, பாரதிதாசன் ஆகியோரே ஹட்டன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

