முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழிய சிறை

442 0

முன்னாள் பிரதி அமைச்சர் ஷாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தண்டனையுடன் சேர்த்து 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டில் அம்பாறை பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் 50,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதி அமைச்சருக்கெதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் குறித்த வழங்கில் முன்னாள் பிரதி அமைச்சர் ஷாந்த பிரேமரத்ன குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment