அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்தவர் கைது

Posted by - November 4, 2017

பம்பலப்பிட்டி – புகையிரத பாதை பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 3 முத்துக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் மாத்தளை வலாவெல பிரதேசத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்

கேரளா கஞ்சாவுடன் 61 வயது நபர் கைது

Posted by - November 4, 2017

கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவர் வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 61 வயதுடையவர் எனவும், இவரிடமிருந்து 347 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

பெற்றோர்களைப் பலிக்கடாவாக்க வேண்டாம்- சைட்டம் எதிர்ப்பு பேரணி

Posted by - November 4, 2017

தமது பெற்றோர்களின் உயிர்களைப் பலிக்கடாவாக்காமல் வைத்திய பீட மாணவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று (04) அனுராதபுர நகரின் பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட பல இடங்களில் பாரியளவு மக்கள் பங்களிப்புடன் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆர். ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச பல்கலைகளில் மருத்து பீடங்களில்

மாத்தளை தெல்கமுவ நீரில் மூழ்கிய 4 பேரின் சடலம் மீட்பு

Posted by - November 4, 2017

மாத்தளை தெல்கமுவ ஆற்றில் நீராடச் சென்று மூழ்கியதாக கூறப்பட்ட பத்துப் பேரில் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 12 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் காணப்படுவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று (4) நண்பகல் வேளையில் குளிக்கச் சென்ற இவர்கள், திடீரென வந்த அதிக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

”இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கு ­தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு முன்­வ­ர­வில்லை “

Posted by - November 4, 2017

யுத்­தத்தை நிறை­வு­செய்த பின்னர் நாட்­டி­லுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத்தீர்வு காண்­ப­தற்கு நான் ஆவ­லாக இருந்தேன். அது குறித்து சகல தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான தீர்வை முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருந்தேன்.  

வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும்! அர்ஜுன

Posted by - November 4, 2017

எதிர்காலத்தில் வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும் எனவும் மக்கள் இது குறித்து எவ்வித அச்சமுமடையத் தேவையில்லையென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்!

Posted by - November 4, 2017

மாத்தளை, லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பௌத்த துற­வி­களே இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர்- சந்­தி­ரிகா

Posted by - November 4, 2017

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும்.

அண்ணன் பிரபாகரன் ஆயுதம் தூக்க சிங்கள ஆட்சியாளர்களே காரணம்! -சாள்ஸ்

Posted by - November 4, 2017

1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தகுதி இருந்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காத மாணவர்களின் சில ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மற்றும் தந்தை செல்வநாயகம் அவர்களுடைய கோட்பாட்டுக்கு