தமது பெற்றோர்களின் உயிர்களைப் பலிக்கடாவாக்காமல் வைத்திய பீட மாணவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று (04) அனுராதபுர நகரின் பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட பல இடங்களில் பாரியளவு மக்கள் பங்களிப்புடன் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆர். ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைகளில் மருத்து பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கடந்த 10 மாத காலமாக விரிவுரைகளைப் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

