வித்தியா படுகொலை – மேலும் சிலர் கைது

Posted by - November 4, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

10 மாதங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

Posted by - November 4, 2017

இந்த வருடத்தின் 10 மாத கால பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 517 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஸ்மீர் பகுதியில் 80 தீவிரவாதிகள் கொலை

Posted by - November 4, 2017

இந்தியாவின் தெற்கு காஸ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஸ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இரகசிய தேடுதல் பணிகளிலும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தெற்கு காஸ்மீரில் கடந்த ஆறு மாதங்களில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் காஸ்மீரின் தெற்கு பகுதியில் இன்னும் 115 தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும் அவர்களில்

மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் தொடர்ச்சியாக யாழில் கண்டுபிடிப்பு!

Posted by - November 4, 2017

மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் பிரதான  புகையிரத நிலையத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் தற்போது குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனம்காணப்பட்டு வருகின்றது. இதனால் குறித்த நடவடிக்கைகள் வேகப்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் இடம்பெறுகின்றன.்இதேநேரம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் 9 கிணறுகளில் இனம்கானப்பட்ட மலேரியாத் தொற்று நுளம்பினம் வல்வெட்டித்துறை , கல்வியங்காடு , கோப்பாய் பகுதிகளிலும் இனம்கானப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

Posted by - November 4, 2017

யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினை தேசிய பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தி அப்பகுதியில் தடுப்பு வேலிகளை அமைக்க முயன்றமை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குப் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பறவைகள் சரணாலயம் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது 6 ஆயிரம் கெக்டேயர் நிலம் அதாவது 14 ஆயிரத்து 500 ஏக்கரை அபகரிக்க வனஜீவராசிகள் திணைக களம் முற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவது தொடர்பில்

காரைநகரில் பனம் விதைகள் நடுகை!

Posted by - November 4, 2017

வடமாகாண மரம் நடுகை மாதத்தில்  காரைநகரில் பனம் விதைகள் நடுகை – மழைக்கு மத்தியிலும் களத்தில் உத்தியோகத்தர்கள் . காரைநகரில்  ‘பனை விதை நடுகைத் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒரே நாளில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன. வடமாகாண மரம் நடுகை மாதமான கார்த்திகை மாதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. கடும் மழைக்கு மத்தியிலும் இந்த விதைகள் நடுகைத் திட்டம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. காரைநகர் பிரதேச செயலாளர்

சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்

Posted by - November 4, 2017

இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்தது போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை  இழந்து வருகின்றோம்  என கிளி நொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யோலன்டா போஸ்டர்  நிலைமாறு கால நீதி செயற்பாட்டில் இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக  வருகை நிலையில் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை சந்தித்துள்ளாா் இதன் போதே  அவா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இன்று (04-11-2017) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 258 ஆவது

தமிழரசுக் கட்சியுடன் இணங்கி செயற்பட ஒருபோதும் முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017

“ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதன்றல்ல. ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட ஒருபோதும் முடியாது என்பதே எமது நிலைப்பாடு”இவ்வாறு அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஈ.பி.ஆர்.எல் எப். ஆரம்பம் முதலே உள்ளது. தமிழ் அரசுக் கட்சிதான் இடையிட்டு உள்ளிட்டது. கூட்டமைப்பிலிருந்து யாரும் பிரிந்து செல்லலாம் எனக் கூற தமிழ்

வாகன விபத்தில் இருவர் படுகாயம் ; அட்டனில் சம்பவம்

Posted by - November 4, 2017

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்டனிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்றும், நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிய ரக

ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் இடமாற்றம் !- கல்வி அமைச்சு

Posted by - November 4, 2017

ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு அதிக காலம் சேவையாற்றும் 1 ஆம் மற்றும் 2 ஆம் தரங்களில் போதிக்கும் ஆசிரியர்கள் தேர்தலுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்கள் 9 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். ஒரே பாடசாலையில் 10 வருடங்களை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அதிபர்களைக் கோரியுள்ளதாகவும் இவை அடுத்த வாரத்தில் கிடைக்கப் பெறும் எனவும்