மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் தொடர்ச்சியாக யாழில் கண்டுபிடிப்பு!

1775 0

மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பிரதான  புகையிரத நிலையத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் இந்திய வகை நுளம்பினம் தற்போது குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனம்காணப்பட்டு வருகின்றது.

இதனால் குறித்த நடவடிக்கைகள் வேகப்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் இடம்பெறுகின்றன.்இதேநேரம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் 9 கிணறுகளில் இனம்கானப்பட்ட மலேரியாத் தொற்று நுளம்பினம் வல்வெட்டித்துறை , கல்வியங்காடு , கோப்பாய் பகுதிகளிலும் இனம்கானப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டம் முழுமையாக தேடும் படலமும் இடம்பெறும் அதேவேளை அழிப்பிற்கான பணிகளை ஒழுங்கமைக்கப்படுகின்றது. இதற்கமைய அழிப்பு நடவடிக்கைக்கான பணிகள் எதிர் வரும் 6 ம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதேவேளை இவ்வாறு மலேரியா நுளம்பு வகை இனம்கானப்பட்ட இடங்களில் வல்வெட்டித்துறையில் இனம்கானப்பட்ட வீடு ஓர் வைத்தியரின் இல்லம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment