சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்

370 0

இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்தது போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை  இழந்து வருகின்றோம்  என கிளி நொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யோலன்டா போஸ்டர்  நிலைமாறு கால நீதி செயற்பாட்டில் இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக  வருகை நிலையில் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை சந்தித்துள்ளாா் இதன் போதே  அவா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இன்று (04-11-2017) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 258 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் மேலும் தெரிவிக்கையில்
 எங்களுடை போராட்ட ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை இந்தப்  போராட்டத்தில் கலந்துகொண்ட ஜந்து  பெண்கள்  உயிரிழந்துள்ளனர்.  பல நோய்களுக்கு உள்ளாக்கியிருக்கும்  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்களின் மீள் வருகைக்காகவே காத்திருக்கின்றனா். எங்களை பொறுத்தவரை நிலைமாறு கால நீதி செயற்பாட்டின் மூலமோ, காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கான அலுவலகம் மூலமோ எவ்வித நீதியும் கிடைக்கப் போவதில்லை இவை அனைத்தும் இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே மேற்கொள்கிறது எனத் தெரிவித்தனர்.
உள்ளுர் அரசியல்வாதிகளின்   செயற்பாடு எவ்வாறு உள்ளது எனக்  யோலன்டா போஸ்டர்  கேள்வி எழுப்பிய  போது
 உள்ளுர் அரசியல் தரப்புக்கள், அவ்வவ்போது பாராளுமன்றத்திலும்,  வெளியிலும் குரல் கொடுகின்றாா்கள் அவ்வளவுதான் எங்களுக்கு எந்தவிதமாத முடிவும் இல்லை எனவும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்தனா். மேலும் தாங்கள் போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் சர்வதேசத்தை சேர்ந்த பல பிரதிநிதிகள்  வந்து சந்தித்து கலந்துரையாடி சென்றுள்ளனா் அவர்களாலும் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தனா்.

Leave a comment