வனஜீவராசிகள் திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

383 0
யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினை தேசிய பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தி அப்பகுதியில் தடுப்பு வேலிகளை அமைக்க முயன்றமை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பறவைகள் சரணாலயம் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது 6 ஆயிரம் கெக்டேயர் நிலம் அதாவது 14 ஆயிரத்து 500 ஏக்கரை அபகரிக்க வனஜீவராசிகள் திணைக களம் முற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக எல்லைப் பகுதிக்குள் உள்ள வடமராட்சி கிழக்குப் பகுதியில் நீண்டகாலமாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய பகுதி ஒன்று இருந்தது. அதளநேரம் இதன் அருகே மக்களிற்கு சொந்தமான நிலப்பரப்புக்களும் இருந்த்தோடு பிரதேச செயலாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளும் கானப்பட்டன.
நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக அப்பகுதி நீண்டகாலமாக யுத்த வலயங்களாகவே கானப்பட்டன.்அதனால் மக்கள் அங்கிருந்து முற்றுமுழுதாகவே வெளியேறியும் இருந்தனர். இந்த நிலையில் போர் முடிந்த பிற்பாடு அங்கு சில மக்கள் மீளக்குடியமர்ந்தும் இன்னும் பல மக்கள் மீளக்குடியமரவும் காத்திருக்கும் நிலையில் தமது ஆளுகை நிலத்தினை பாதுகாக்க வனஜீவராசிகள் திணைக்களம் முற்பட்டது.
அவர்களிற்குச் சொந்தமான மக்கள் வாழ்விடமற்ற நிலப்பகுதிகளை குறித்த திணைக்களம் ஆளுகை செய்வதில் எவரும் குறுக்கீடு செய்யவில்லை. ஆனால் நீண்டகாலமாக மக்கள் இடம்பெயர்ந்தமையினால் தற்போது புதிதாக உருவான காடுகளையும் சேர்த்து ஆளுகை செய்வது மட்டுமன்றி மக்களின் வாழ்விடங்களையும் அபகரித்து தடுப்பு வேலிகள் அமைப்பதனை அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் குறித்த விடயத்திற்கு தீர்வினை வழங்குமாறு அப்பகுதி மக்கள் என்னிடமும் கோரிக்கை விடுத்ததோடு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் மேற்படு கோரிக்கையினை கொண்டு சென்றனர். இதனால் நாமும் அப்பகுதியினை நேரில் பார்வையிட்டோம். அதன்போது மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டில் உண்மைகள் இருப்பதுபோல் தெரிகின்றது.
எனவே இவ் விடயத்திற்கு ஓர் நிரந்தரத் தீர்வினை எட்டி அதற்கு தீர்வு கானும். வரையில் குறித்த திணைக்களம் அப்பகுதியில் எல்லையிடும் பணியினை உடன் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். இது தொடர்பில் சகலதரப்பும் மீண்டும் ஒன்றுகூடி ஆராய்ந்து அவைதொடர்பில் இறுதி முடிவு ஒன்றினை எட்டவேண்டும்.
அந்த முடிவின்பால் வர்த்தகமானி அறிவித்தல் செய்து மக்களின் வாழ்விடமும் உறுதிப்படுத்தப்பட்டு திணைக்களத்மின் நிலம் பாதுகாக்கப்படவேண்டும். அதுவரையில் எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம். என அறிவுறுத்தியுள்ளோம். என்றார். –

Leave a comment