காஸ்மீர் பகுதியில் 80 தீவிரவாதிகள் கொலை

12331 2,863

இந்தியாவின் தெற்கு காஸ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஸ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இரகசிய தேடுதல் பணிகளிலும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தெற்கு காஸ்மீரில் கடந்த ஆறு மாதங்களில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காஸ்மீரின் தெற்கு பகுதியில் இன்னும் 115 தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும் அவர்களில் உள்ளூர் தீவிரவாதிகள் 99 பேரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இராணுவம் எடுத்துவம் நடவடிக்கைகளினால் விரைவில் அமைதி திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

There are 2,863 comments

  1. KeithDic |