ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு அதிக காலம் சேவையாற்றும் 1 ஆம் மற்றும் 2 ஆம் தரங்களில் போதிக்கும் ஆசிரியர்கள் தேர்தலுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்கள் 9 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஒரே பாடசாலையில் 10 வருடங்களை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அதிபர்களைக் கோரியுள்ளதாகவும் இவை அடுத்த வாரத்தில் கிடைக்கப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தரத்தில் போதிக்கும் 2800 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

