விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் – முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி

Posted by - November 6, 2017

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத், உயர்நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். தன்னைக் கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, காமினி செனரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினார். மேலும், தேவையான வாக்குமூலத்தை வழங்க எதிர்வரும் 9ம் திகதி காமினி செனரத் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் – ஷலில உள்ளிட்ட நால்வருக்கு பிணை

Posted by - November 6, 2017

லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், ஷலில முணசிங்க உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று இவர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஹெம்மாத்தகமவில் மட்டும் எரிபொருள் பற்றாக்குறையில்லை

Posted by - November 6, 2017

நாடளாவிய ரீதியாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் ஹெம்மாத்தகம எரிபொருள் நிலையத்தில் வழமையாக எரிபொருள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றும் நோக்கில் கேகாலை, கம்பளை, மாவனெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் வாகனங்கள் வந்து செல்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரணாயக்க, மாவனெல்லை, கேகாலை உள்ளிட்ட பிரதேசங்களில் தற்போதைய நிலையில் எரிபொருள் தீர்ந்து போயுள்ள நிலையில் ஹெம்மாத்தகம நிரப்பு நிலையத்தில் மாத்திரம் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய நாளுக்கு போதுமான

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படை கப்பல்

Posted by - November 6, 2017

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான ´பிஎன்எஸ் சைப்´ கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளது. 123 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக் கப்பல், 225 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர்வரும் 08ம் திகதி இலங்கையில் இருந்து இக் கப்பல் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய ஒற்றுமையினை பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் – உடுவே தம்மாலோக தேரர்

Posted by - November 6, 2017

“பள்ளிவாசல் என்பது ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து, தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என, உடுவே தம்மாலோக்க தேரர் தெரிவித்தார். கொழும்பு கிருலப்பனை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஏற்பாட்டில், இலவச மருத்துவ முகாமொன்று நேற்று நடைபெற்றது. இந்த வைத்திய

பரந்தன் வாழ் மக்களினால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணி

Posted by - November 6, 2017

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கு மக்கள் தற்போது தயாராகி உள்ள நிலையில்  வடக்கு கிழக்கு மாவீரர் துயிலும் இலங்கள்  மக்களினால் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று (5)கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இலத்தினை பரந்தன் வாழ் மக்கள் தாமாகமுன் வந்து சிரமதானப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். இது போன்று பல கிராமத்தினை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக சிரமாதனப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது. இது போன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் 

இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் சிறைதண்டனை 

Posted by - November 6, 2017

ஆறு இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் தலா 3 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1.19 மில்லியன் திர்ஹாம்களை திருடிய சம்பவம் ஒன்று தொடர்பில் அவர்களுக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 50 மில்லியன் ரூபாய்களாகும். டுபாயிலுள்ள பாதுகாப்பு பணியாளர் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிந்துள்ள இவர்கள் பல விற்பணையகங்களில் பணம் திருடிய குற்றச்சாட்டில் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், அவர்களுக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சைட்டம் தொடர்பாக ஆர்ப்பட்டத்தின் மீது தாக்குதல் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - November 6, 2017

கடந்த 10ஆம்; திகதி கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முற்போக்கு சோசலிச கட்சி இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விரையில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்யவுள்ளதாக கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டார். இதேவேளை, சைட்டம் தனியால் பல்கலைக்கழகத்தை முழுவதுமாக கலைக்குமாறு கோரி அரச பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இன்று பிற்பகலில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை

குற்றத்தை ஒப்புக்கொண்டனர் ஹிருனிகா தவிர்த்த ஏனையவர்கள்

Posted by - November 6, 2017

தெமட்டகொடையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர தவிர்ந்த ஏனைய அவரது பாதுகாப்பு உறுப்பினர்கள் எட்டு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த எட்டு பேரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கமைய அவர்கள் எட்டு பேருக்குமான தண்டனை தீர்ப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

பெற்றோலுக்கு இன்றும் வரிசை – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

Posted by - November 6, 2017

பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களை  காணக்கூடியதாக உள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘பெற்றோல் இல்லை’ என்ற பாதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை மட்டுப்படுத்தி விநியோகிக்குமாறு கனிய எண்ணை கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது. இந்தநிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இதனை அடுத்து பெற்றோல் தொடர்பான ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்த