பெற்றோலுக்கு இன்றும் வரிசை – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

7145 69
பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களை  காணக்கூடியதாக உள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘பெற்றோல் இல்லை’ என்ற பாதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை மட்டுப்படுத்தி விநியோகிக்குமாறு கனிய எண்ணை கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இதனை அடுத்து பெற்றோல் தொடர்பான ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, கையிருப்பில் உள்ள எரிபொருளை எதிர்வரும் சில தினங்களுக்கு பகிர்த்தளிப்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment