சைட்டம் தொடர்பாக ஆர்ப்பட்டத்தின் மீது தாக்குதல் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

414 0
கடந்த 10ஆம்; திகதி கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முற்போக்கு சோசலிச கட்சி இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விரையில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்யவுள்ளதாக கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டார்.
இதேவேளை, சைட்டம் தனியால் பல்கலைக்கழகத்தை முழுவதுமாக கலைக்குமாறு கோரி அரச பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இன்று பிற்பகலில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பி;க்கவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி சிறந்த ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் நிமல் கருணாசிறி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment