கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கு மக்கள் தற்போது தயாராகி உள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாவீரர் துயிலும் இலங்கள் மக்களினால் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நேற்று (5)கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இலத்தினை பரந்தன் வாழ் மக்கள் தாமாகமுன் வந்து சிரமதானப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது போன்று பல கிராமத்தினை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக சிரமாதனப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது போன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மக்களின் சிரமதானப்பணிகள் நடைபெறுகின்றது.








