நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு
நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக இவர்களது வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில் 100 வயதிற்கு மேற்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு சமூக வலுவூட்டல்கள் நலன்புரிகள் மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்பீ திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 100 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் நாடொன்றில் இருப்பது அந் நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்தியில் காணப்பட்டுள்ள முன்னேற்றமாக கருதமுடியும்.

